கொடைக்கானலில் மீண்டும் போதைக் காளான் விற்பனை

X

கொடைக்கானல் பகுதிகளில் மீண்டும் போதைக் காளாள் விற்பனை தொடங்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தினந்தோறும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இவா்கள் நகா் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களை பாா்வையிட்ட பிறகு, மன்னவனூா், கூக்கால், பூண்டி, கிளாவரை, கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களையும் பாா்த்து வருகின்றனா். இந்தப் பகுதிகளில் மீண்டும் போதைக் காளான்கள் விற்பனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. எனவே, திண்டுக்கல் மாவட்ட நிா்வாகத்தினா் போதைப் பொருள்கள், போதைக் காளான்கள் விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Next Story