மினிபஸ்களை இயக்க அழைப்பு

X

திண்டுக்கல்லில் மினிபஸ்களை இயக்க அழைப்பு
திண்டுக்கல் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட ஏர்போர்ட் நகர் - விராலிப்பட்டி, ஆலம்பட்டி - அய்யலுார், வேடசந்துார் - வெல்லாம்பட்டி, சாலையூர் நால்ரோடு - சுள்ளெறும்பு, பெருமாள்மலை - அடுக்கம், நிலக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் - தாலுகா அலுவலகம், பெருமாள்மலை - கணேசபுரம் வழித்தடங்களில் மினிபஸ்கள் இயக்க ஆர்வமுள்ளவர்கள் நாளை (செப்.19)க்குள் வழித்தடத்தை குறிப்பிட்டு திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.
Next Story