அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி

X

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி நடந்தது.
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரிக் கல்வி ஆணையர் அறிவுறுத்தலின்படி,தந்தை பெரியார் பிறந்த நாளில், சமூக நீதி நாள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி முதல்வர் (பொ) சரவணாதேவி தலைமையில் நடந்தது. இதில் மாணவ, மாணவியர் பெருமளவில் பங்கேற்று, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைபிடிப்பேன், என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் அனைத்து பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
Next Story