உடல்நலம் இல்லாமல் கூலி பெண் தொழிலாளி இறப்பு

உடல்நலம் இல்லாமல் கூலி பெண் தொழிலாளி இறப்பு
X
குமாரபாளையம் அருகே உடல்நலம் இல்லாமல் கூலி பெண் தொழிலாளி இறந்தார்.
குமாரபாளையம் கல்லங்காட்டுவலசு பகுதியில் வசிப்பவர் கமலா, 45. கூலி வேலை. இவரது கணவர் செல்வராஜ், 53, தனியார் கல்லூரியில் தோட்ட வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் நேரம் சரியில்லை என்று, பல வருடங்களாக, கமலா தன் பெற்றோர் வீட்டில் தங்கி உள்ளார். இவருக்கு ஆஸ்துமா, கிட்னி பாதிப்பு உள்ளிட்ட நோய்கள் உள்ளன. நேற்றுமுன்தினம் இரவு 07:15 மணியளவில், இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப் பட்டார். இவரை பரிசோதித்த டாக்டர் இவர் வரும் வழியில் இறந்து விட்டார் என்று கூறியுள்ளார். இது குறித்து செல்வராஜ், குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் படி குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story