ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விவசாயி புகார்

சாயல்குடி பகுதியில் கூலி தொழிலாளியின் பல லட்சம் மதிப்பிலான விவசாய இடத்தை போலி பத்திரம் பதிவு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் சுப்பிரமணியன் இவர் கூலி தொழில் செய்து வருகிறார் சுப்பிரமணி தர்மலிங்கம் சண்முகம் ஆகிய மூவருக்கு சொந்தமான பூர்வீக சொத்து சாயல்குடி அருகே செவல்பட்டி சாலையில் உள்ள 1.ஏக்கர் 77 சென்ட் நிலத்தை இவர்களுக்கு தெரியாமல் போலி பத்திரம் மூலம் பதிவு செய்துள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது அதில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் சுப்பிரமணி 2025 ஜூன் மாதம் போலி பத்திரம் மூலம் பதிவு செய்துள்ளார் அதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி மிக்கேல் பாக்கியம் என்பவருக்கு பத்திரப்பதிவு செய்து அதன் பின்பு சாயல்குடி பகுதியைச் சார்ந்த பரலோக ராஜ் என்பவருக்கு சாயல்குடி பத்திரப்பதிவு துணை பதிவாளர் வேலாயுதம் உதவியுடன் பத்திரப்பதிவு போலியாக செய்யப்பட்டுள்ளது சுப்பிரமணி மற்றும் உறவினர்கள் நிலத்தில் உழவு செய்து விவசாய பணிகளில் ஈடுபடலாம் என்ற எண்ணத்தில் வந்து பார்த்தபோது இடங்களில் கல் ஊண்டப்பட்டு பிளாட்டுகளாக மாற்றப்பட்டுள்ளது இது கண்டு அதிர்ச்சி அடைந்து உறவினருடன் தெரிவித்து ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஸிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு கொடுத்தார் போலி பத்திரம் மூலம் நிலத்தை அபகரிப்பு செய்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பத்திரப்பதிவு ரத்து செய்துவிட்டு எனது இடத்தை மீட்டு தர வேண்டும் என புகார் மனு கொடுத்தார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பத்திரப்பதிவு அலுவலகத்தை குடும்பத்துடன் முற்றுகையிட்டு போராட்டம் செய்யப் போவதாக தெரிவித்தார்
Next Story