ராமநாதபுரம் காந்தி ஜெயந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

காந்தி ஜெயந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
ராமநாதபுரத்தில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் ராமநாமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொறுப்புக் குழு உறுப்பினரும் நகரமன்ற உறுப்பினருமான ராஜாராம்பாண்டியன், தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில மகிளா காங்கிரஸ் உறுப்பினர் ராமலட்சுமி, வட்டார தலைவர் காருகுடி சேகர், மாவட்ட முன்னாள் ராணுவ அணி தலைவர் கோபால், நகர் தலைவர் கோபி, மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதன்பின்பு தாலுகா காங்கிரஸ் அலுவலகத்தில் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் அணித்தலைவர்கள் மற்றும் வட்டார நகர பேரூராட்சி தலைவர்கள் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு காமராஜர் திருவுருவப்படத்திற்கு மரியாதை செய்தனர். இதன்பின்பு நகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் காலோன், மற்றும் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவின்தங்கம் ஆகியோர் கலந்துகொண்டு மரியாதை செய்தனர்.
Next Story