ஆரணி கோட்டை மைதானத்தில் கஞ்சா போதையில் இளைஞர்கள் ரகளை
Arani King 24x7 |3 Oct 2025 6:23 PM ISTஆரணியில் கஞ்சா போதையில் இளைஞர்கள் சிறுமிகளிடம் ரகளை, விசாரிக்க வந்த போலீசாரை ஒருமையில் ஆபாசமாக திட்டிய கஞ்சா போதை இளைஞர்களால் பரபரப்பு.
ஆரணியில் கஞ்சா போதையில் இளைஞர்கள் சிறுமிகளிடம் ரகளை, விசாரிக்க வந்த போலீசாரை ஒருமையில் ஆபாசமாக திட்டிய கஞ்சா போதை இளைஞர்களால் பரபரப்பு. கஞ்சா போதை இளைஞர்களை பாதுகாப்பாக ஊர் போய் சேருங்கள் என்று அறிவுரை கூறி வழி அனுப்பி வைத்த போலீஸ்.... ஆரணி டவுன் கோட்டை மைதானத்தில் சில இளைஞர்கள் கஞ்சா போதையில் சிறுமிகளிடம் ரகளையில் ஈடுபட்டதாக அங்கு இருந்தவர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து டவுன் போலீசார் கோட்டை மைதானத்திற்கு உள்ளே நுழைந்ததும் அங்கு சிறுமிகளிடம் ரகளையில் ஈடுபட்டிருந்த சில இளைஞர்கள் தப்பி ஓடினர். மேலும் அங்கிருந்த சிறுமிகளிடம் போலீசார் விசாரித்த போது போதையில் இருந்த அந்த இளைஞர்கள் தங்களிடம் ரகளையில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். அப்போது இரண்டு இளைஞர்களை போலீசார் காவல் நிலையம் அழைத்து செல்லும்போது கஞ்சா போதையில் இருந்த அந்த இளைஞர்கள் போலீசாரை ஒருமையில் பேசி ஆபாசமாக திட்டினர் மேலும் தற்போது உள்ள ஆட்சியில் இப்படித்தான் நடக்கும் என்றும் கூறி போதையில் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அந்த இளைஞர்களை காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு பணியில் இருந்த ஆய்வாளர் செந்தில்விநாயகம் அந்த போதை இளைஞர்களை என்ன ஏது என்று விசாரிக்காமல், மாறாக பாதுகாப்பாக ஊர் போய் சேருங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story




