ராமநாதபுரம் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
Ramanathapuram King 24x7 |6 Oct 2025 3:48 PM ISTஏரான் துறை கிராமத்தில் நிலத்தடி நீர் விற்பனைக்கு எதிர்ப்பு ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்
ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அருகே உள்ள ஏரான் துறை கிராமத்தில் நிலத்தடி நீரை கிணறு அமைத்து எடுத்து, வணிக ரீதியாக விற்பனை செய்வது தொடர்பாக உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஏரான் துறை கிராமத்தில் சிலர் தனிநபர் கிணறுகள் அமைத்து, அதிலிருந்து எடுக்கப்படும் நீரை வீடுகள் கட்டும் பணிகளுக்கும், கடைகளுக்கும், மேலும் தனிப்பட்ட தேவைகளுக்கும் விற்பனை செய்து வருகின்றனர். இதன் விளைவாக கிராமத்தில் நிலத்தடி நீர் அளவு வேகமாக குறைந்து வருவதாகவும், எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாகும் சூழல் உருவாகி வருவதாகவும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். எங்கள் கிராமத்தில் தண்ணீர் ஏற்கனவே குறைந்து வருகிறது. இதை வணிக நோக்கில் எடுத்து விற்பனை செய்ய அனுமதித்தால், சில ஆண்டுகளில் எங்கள் கிராமம் தண்ணீர் இல்லாத நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளது. உடனடியாக இந்த நீர் விற்பனைக்கு தடையிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கிராம மக்கள் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, இன்று ஏரான் துறை கிராம மக்கள் குழுவாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவைப் பெற்ற மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story


