ராமநாதபுரம்எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது

பொதுமக்களை அச்சுருத்தி வரும் வெறிபிடித்த தெருநாய்களை அப்புறபடுத்த கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் பேரணியாக வந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
ராமநாதபுரம் மாவட்டத்தில், கிராம்,நகர் என அனைத்து தெருக்களிலும் குழந்தைகள்,பெண்கள்,முதியவர்களை அச்சுருத்தி வரும் வெறிபிடித்த தெரு நாய்களை அப்புறபடுத்த கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டம் சார்பில் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், எஸ்.டி.பி.ஐ கட்சி மேற்கு மாவட்ட தலைவர் நூருல்ஹமீன்,மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் செய்யது இப்ராஹீம்,மாவட்ட செயலாளர் ராஜா முகம்மது, மற்றும் கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் முகம்மது சுலைமான்,நகர் தலைவர் ஹக்கீம் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டவர்கள் பொதுமக்களை அச்சுருத்தி வரும் நாய்களை அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
Next Story