ராமநாதபுரம் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
Ramanathapuram King 24x7 |8 Oct 2025 7:48 AM ISTதேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் சிங்கை ஜின்னா தலைமையில் தனியார் மஹாலில் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக தவெக கட்சியின் தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் இறந்த 41 பேர் மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா அவர்களுடைய தாயார் இறப்புக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்பு ஆலோசனைக்கூட்டத்தில் நகர் கழக செயலாளர் ஏ. எஸ். பாண்டி வரவேற்புரையாற்றினார். இதன் பின்பு பேசிய மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா தமிழகத்தில் மிகப்பெரிய ஊராட்சியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலாடி 60 ஊராட்சிகளை கொண்டதாக உள்ளது. இதை இரண்டாக பிரித்து தருவதாக கடந்த தேர்லின்போது அறிவிக்கப்பட்டது. மேலும் ராமநாதபுரத்தில் உள்ள நகராட்சியை மாநகராட்சி ஆக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதனுடைய பணிகளை செயல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளது. நகராட்சியை விரிவு படுத்தி மாநகராட்சியாக அறிமுகப்படுத்திய பின்பு தொழிற்சாலை அறிவிக்கப்படும். எனவே வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கி மாவட்டமான ராமநாதபுரம் பொதுமக்களுக்கு தொழில் சாலைகளை கொண்டுவந்து வேலைவாய்ப்புகளை உறுவாக்கவில்லை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு விமான நிலையம் அமைப்பதாக திமுக அரசு கூறியது, இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை பழைய திட்டங்களை மட்டும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்து சென்றார். மேலும் மாவட்டம் தோரும் நடைபெறும் தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின்படி தேர்தலில் யாருடன் கூட்டணி என்று ஒட்டுமொத்த நிர்வாகிகள் தேர்வு செய்து தலைமை கழகத்திடம் தெரிவிப்போம் என்றார். இதில் நகர் கழக ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story




