அரையாளம், மேல்சீசமங்கலம் ஆகிய கிராமங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம். ஆரணி எம்.பி. தரணிவேந்தன் பங்கேற்பு.

அரையாளம், மேல்சீசமங்கலம் ஆகிய கிராமங்களில்  உங்களுடன் ஸ்டாலின் முகாம்.  ஆரணி எம்.பி. தரணிவேந்தன் பங்கேற்பு.
X
ஆரணி அருகே அரையாளம், மேல்சீசமங்கலம் ஆகிய கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அரையாளம், மேல்சீசமங்கலம் ஆகிய கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். ஆரணி அருகே அரையாளம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை ஆரணி வருவாய் கோட்டாட்சியர் சிவா தலைமையில் நடைபெற்றது. அனைவரையும் ஒன்றிய செயலாளர் துரைமாமது வரவேற்றார். மேலும் நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம், ஆரணி வட்டாட்சியர் கௌரி, ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி அருகே மேல்சீசமங்கலம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் செய்யார் சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி தலைமை தாங்கினார். இம்முகாமில் மேல்சிசமங்கலம், திருமணி, பல்லாந்தாங்கல் ஆகிய கிராம மக்கள் பயன் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அனைவரையும் ஒன்றியசெயலாளர் ஆரணி மத்திய ஒன்றிய பொறுப்பாளர் சு. ராஜ்குமார் வரவேற்று பேசினார். மேலும் முகாம்களில் சிறப்பு விருந்தினராக ஆரணி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளரும் எம். எஸ்.தரணிவேந்தன் கலந்து கொண்டு முகாமில் தீர்வு பெற்றவர்களுக்கு சான்றுகளை வழங்கி பேசியது, உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் மனு அளித்த உடனே தீர்வு கண்டு பயனாளிகளுக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இதில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மருத்துவ மக்கள் நல்வாழ்வுத்துறை எரிசக்தி துறை கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை கலைஞர் உரிமைத்தொகை உள்ளிட்ட 13 துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் இங்கு மனு கொடுத்தால் உடனடியாக வழங்க ஆவணம் செய்யப்படும்.என்று பேசினார். மேலும் இதில் மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்டத் துணை செயலாளர் ஜெயராணிரவி , நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, ஒன்றிய செயலாளர்கள் சுந்தர், எம்.டி.மனோகரன், மோகன், கண்ணமங்கலம் பேரூர் செயலாளர் கோவர்தனன், நகர பொறுப்பாளர் வ.மணிமாறன்,முன்னாள் ஒன்றிய சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன், முன்னாள் ஒன்றியகவுன்சிலர் ஏ.எம்.ரஞ்சித் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Next Story