ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
Ramanathapuram King 24x7 |9 Oct 2025 4:41 PM ISTபாஜகவும் தேர்தல் ஆணையம் இணைந்து நடத்தி வரும். வாக்குத்திருட்டை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மக்கள் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் நடந்தது. மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் கோபால் தலைமையில் பாஜகவும் தேர்தல் ஆணையம் இணைந்து நடத்தி வரும். வாக்குத்திருட்டை கண்டித்து பொதுமக்களுடன் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது இதில் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார். இதில் தேசிய மீனவர் காங். தலைவர் ஆம்ஸ்ட்ராங் பர்னாண்டோ, மகளிர் காங். தேசியக்குழு உறுப்பினர் ராமலட்சுமி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை அப்துல்லா, தெய்வேந்திரன், மாநில பொதுச் செயலர் ரமேஷ் பாபு ஆகியோர் பேசினர். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பாரிராஜன், ஜோதி பாலன், செந்தாமரைக்கண்ணன், சரவண காந்தி, குமார், மரியம் அருள், மாநிலச் செயலர்கள் ஆனந்த குமார், அடையாறு பாஸ்கரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகானந்தம், மாநில மீனவர் காங் தலைவர் ஜோர்தான், நகர்மன்ற உறுப்பினர் மணிகண்டன், வழக்கறிஞர் பிரிவு செயலர் கிருஷ்ணமூர்த்தி, வட்டாரத்தலைவர்கள் சேது பாண்டியன், சேகர், வேலுச்சாமி, சுப்ரமணியன், மனோகரன், தட்சிணாமூர்த்தி, ஆதி, மாவட்ட தலைவர்கள் பாஸ்கர சேதுபதி (ஓபிசி அணி), ராஜகோபால் (முன்னாள் ராணுவப் பிரிவு), ஹாஜா நதி முதீன் (சிறுபான்மை பிரிவு), ராஜா (பட்டியல் அணி), ராமேஸ்வர் நகர் தலைவர் ராஜீவ் காந்தி, இளைஞர் காங் நிர்வாகி அருண் உள்பட பலர் பங்கேற்றனர். ராமநாதபுரம் நகர் காங். தலைவர் கோபி நன்றி கூறினார்.
Next Story





