பாமக தலைவர் அன்புமணி பிறந்தநாள் முன்னிட்டு ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்.

பாமக தலைவர் அன்புமணி பிறந்தநாள் முன்னிட்டு ஆரணி தொகுதி பாமக சார்பில் ஆரணி கோட்டை ஸ்ரீ வேம்புலி அம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
ஆரணி, பாமக தலைவர் அன்புமணி பிறந்தநாள் முன்னிட்டு ஆரணி கோட்டை ஸ்ரீ வேம்புலி அம்மன் கோவிலில் பாமக மாவட்ட செயலாளர் வேலாயுதம் தலைமையில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் அரியப்பாடி பிச்சாண்டி, மாவட்டதுணைசெயலாளர் து.வடிவேல், மாவட்டநிர்வாகி எம்.வெங்கடேசன், மு.மெய்யழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரசெயலாளர்கள் சதீஷ்குமார், சு.ரவிச்சந்திரன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். ஒனறியசெயலாளர்கள் அக்கூர் பெருமாள், அஜித்குமார், மு.பெருமாள், அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story