ஆரணி பகுதியில் காலவரையற்ற கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்தம்.
Arani King 24x7 |9 Oct 2025 11:32 PM ISTஆரணி ஒன்றியம், மேற்குஆரணி ஒன்றிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினர் அக் 6 முதல் தொடர்ந்து 4 வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அக் 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணியாளர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி எந்தவித நிபந்தனையும் இல்லாமல் 20 சதவீத ஊதிய உயர்வு, 2021க்கு பிறகு ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்குதல் மற்றும் கருணை ஓய்வுதியத்தினை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், கணினி பணியாளர்கள் மற்றும் நகை மதிப்பீட்டாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், விற்பனையாளர்களாக பணியில் சேர்பவர்களுக்கு தொகுப்பூதியம் இல்லாமல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தேவையற்ற இடங்களில் முதல்வர் மருந்தகம் ஏற்படுத்தி தினசரி ரூ.1000க்கு விற்பனை செய்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அக் 6 முதல் ஆரணி அடுத்த சேவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து அக் 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ஊழியர்கள் பணிக்கு வராததால் மூடப்பட்டிருந்தது. இது குறித்து மாவட்ட தலைவர் ஏ.சேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கூறுகையில், எங்களது சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்றும் அடுத்த கட்டமாக சாலை மறியல் போராட்டமும் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் இதில் மாவட்டசெயலாளர் ஜி.ஏழுமலை, மாவட்டதுணைதலைவர் துரை, முன்னாள் மாவட்ட தலைவர் கே.ஆனந்தன், மாவட்ட பொருளாளர் அண்ணாமலை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
Next Story



