ஆவணியாபுரத்தில் அதிமுக பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம்.
Arani King 24x7 |10 Oct 2025 6:34 PM ISTபெரணமல்லூர் அருகே ஆவணியாபுரம் கிராமத்தில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக ஜெ பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது.
ஆரணி, பெரணமல்லூர் அருகே ஆவணியாபுரம் கிராமத்தில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக ஜெ பேரவை சார்பில் வெள்ளிக்கிழமை திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெ பேரவை சார்பில் பெரணமல்லூர் மேற்கு ஒன்றியம் ஆவணியாபுரம் பகுதியில் நடைபெற்ற திண்ணைப்பிரச்சாரம் கூட்டத்திற்கு ஜெ பேரவை மாவட்ட செயலாளர் பாரி பி.பாபு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா கலந்து கொண்டு கடந்த அதிமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட மக்கள் நலதிட்டங்கள் குறித்தும், திமுக ஆட்சியின் அவலங்கள் குறித்தும் துண்டு பிரசுரங்களை வீடு, வீடாகவும், வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் விநியோகம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஸ்ரீதர், விமல், எம்ஜிஆர் அணி ஒன்றிய செயலாளர் பெருமாள், ஒன்றிய பேரவை செயலாளர் அண்ணாமலை மற்றும் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Next Story


