எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகள். வேந்தர் ஏ.சி.சண்முகம் வழங்கினார்.

ஆரணி டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக வளாகத்தில் பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகளை பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் வழங்கினார்.
ஆரணி டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக வளாகத்தில் பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகளை பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் வழங்கினார். ஆரணி எம்ஜிஆர் பல்கலைக்கழக வளாகத்தில் டாக்டர் எம்ஜிஆர் நிகர் நிலை பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் பொதுமக்களுக்கு அரிசி பேக், ஹாட் பாக்ஸ் மற்றும் வேட்டி, சேலை உதவிகளை வழங்கினார். மேலும் ஆரணி ஏ.சி.எஸ் கல்வி குழுமங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம் பரிசு தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினார். இதில் ஏ.சி.எஸ். குழும நிர்வாக தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் தலைமை தாங்கினார். ஏ.சி.எஸ் குழும செயலாளர் ஏ.சி.இரவி, டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் டீன் பி.ஸ்டாலின், துணைப் பதிவாளர்கள் வி.பெருவழுதி, கே.சரவணன் மற்றும் கல்வி குழுமங்களின் முதல்வர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
Next Story