ராமநாதபுரம் கோட்ட பொறியாளர் செய்தியாளர் சந்திப்பு

ராமநாதபுரம் கோட்டத்தில் 179 கோடியே 25 லட்சம் மதிப்பிலான சாலை பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முருகன் பேட்டி
ராமநாதபுரம் மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை மூலம் பல்வேறு சாலை பணிகள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பயன்பாட்டுக்காக செய்யப்பட்டுள்ளது, இது குறித்து ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் கடந்த 2023 24 25 ஆகிய நிதியாண்டில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பாக ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் மூலம் 44 பணிகளும் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்ட மூலம் மூன்று பணிகளும் சாலை பாதுகாப்பு தணிக்கை பணிகள் 17 கூடுதல் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்ட மூலம் மூன்று பணிகளும் சந்திப்பு மேம்பாடு நான்கு பணிகளும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் இரண்டு என மொத்தம் 73 பணிகள் செய்யப்பட்டுள்ளது இதற்காக ரூபாய் 179 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் செய்யப்பட்டுள்ளது இது பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பாக அச்சுந்தன் வயல் முதல் இராமநாதபுரம் நகராட்சி சாலை வரை ஒரு கிலோ மீட்டர் அளவிலும் திருப்புல்லாணி முதல் உத்தரகோசமங்கை வரை 2 கிலோ மீட்டர் அகலப்படுத்துதல் ஆர் காவனூர் முதல் பாண்டியூர் வரை 10 கிலோ மீட்டர் அகலப்படுத்தும் பணி மேலும் 3 கிலோ மீட்டர் அளவு விரிவாக்கம் செய்வதற்கு ஒப்பந்தம் கூறப்பட்டுள்ளது வழுதூர் முதல் பெரியபட்டினம் செல்லும் சாலை வரை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது முதுகுளத்தூர் முதல் கமுதி கீழக்கரை முதல் 2 கிலோ மீட்டர் செல்லும் சாலை பணிகள் நடைபெற ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது கோப்பெரிமடம் முதல் ஆற்றங்கரை சாலை சீரமைப்பு ஆலங்குளம் சாலை சீரமைப்பு பாரதி நகர் இருந்து பட்டணங்காத்தான் வரை சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற உள்ளது என நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முருகன் தெரிவித்தார்
Next Story