ஆரணியில் மூன்று புதிய தாழ்தள சொகுசு பேருந்து மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைப்பு. ஆரணி எம்.பி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஆரணி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து மூன்று புதிய தாழ்தள சொகுசு பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஆரணி எம்.பி எம்.எஸ்.தரணியவேந்தன் துவக்கி வைத்தார்.
ஆரணி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து மூன்று புதிய தாழ்தள சொகுசு பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஆரணி எம்.பி எம்.எஸ்.தரணியவேந்தன் துவக்கி வைத்தார். ஆரணி முதல் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை வரை ஒரு தாழ்தள பேருந்தும், ஆரணி முதல் ரத்தினகிரி சிஎம்சி மருத்துவமனை வரை ஒரு பேருந்தும், ஆரணி முதல் வாலாஜா அரசு மகளிர் கலைக்கல்லூரி என மூன்று வழிதடத்தில் புதிய தாழ்தள சொகுசு பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆரணி எம்.பி, எம்.எஸ் தரணிவேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ஆரணி கோட்டாட்சியர் சீ.சிவா தலைமை தாங்கினார். அனைவரையும் தொழிலாளர் முன்னேற்ற தொழிற்சங்க நிர்வாகி மெய்யூர் காசி வரவேற்றார். அரசு பணிமனை பொது மேலாளர் ஸ்ரீதர், ஆரணி பணிமனை கிளை மேலாளர் விநாயகம், துணை மேலாளர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இதில் மாவட்ட துணை செயலாளர் ஜெயராணிரவி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஆரணி தொகுதி பொறுப்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன், நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி, நகர பொறுப்பாளர் வ.மணிமாறன், ஒன்றிய செயலாளர்கள் சுந்தர், மாமது, மோகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி உதயசங்கர் நன்றி கூறினார்.
Next Story