ராமநாதபுரம் மாற்றுக் கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் இணைவிலா நடைபெற்றது
Ramanathapuram King 24x7 |18 Oct 2025 12:39 PM ISTநகர் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில்மாற்றுக் கட்சியினர்காங்கிரஸில்இணையும் விழா பொறுப்புக் குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் தலைமையில்நடைபெற்றது
இராமநாதபுரம் காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினரும் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொருளாளருமான ராஜாராம் பாண்டியன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு கட்சிகளில் இருந்தும் விலகி தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர். இவர்களுக்கு தீபாவளி பரிசாக இலவச வேஷ்டி, சேலை இனிப்புகள் மற்றும் பண முடிப்புகளை பொறுப்பு குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருப்புல்லாணி வட்டார காங்கிரஸ் தலைவர் சேது பாண்டியன் காருகுடி சேகர் மாவட்ட நகர் தலைவர் கோபி மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story





