பரமத்தி வேலூரில் ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்.

பரமத்தி வேலூரில் ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்.
X
பரமத்தி வேலூரில் ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
பரமத்தி வேலூர் அக். 17: பரமத்தி வேலூர் காமராஜர் சிலை அருகே ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஆர்ப்பாட்டத்துக்கு கு.விஜயன் தலைமை வகித்தார். அருள் மணி, மதியழகன், சேகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து பேசி னர். இதில் 2023-க்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு பங்க ளிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து புதிய ஓய்வூதி யத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பு ஊதியம், சத்துணவு, அங் கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செவிலியர் கள், ஊர்ப்புற நூலகங்கள், கல்வித் துறையில் பணியாற்றும் தூய் மைப் பணியாளர்கள், செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல் நோக்கு மருத்துவமனையில் பணியாற்றுபவர்கள், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக் கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story