சங்கரன்கோவிலில் மழையால் சேதமான வீட்டைப் பாா்வையிட்ட எம்எல்ஏ

சங்கரன்கோவிலில் மழையால் சேதமான வீட்டைப் பாா்வையிட்ட எம்எல்ஏ
X
மழையால் சேதமான வீட்டைப் பாா்வையிட்ட எம்எல்ஏ
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கனமழையால் சேதமான வீட்டை தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலரும் எம்எல்ஏவுமான ஈ. ராஜா பாா்வையிட்டாா். இரவு பெய்த தொடா் கனமழையால், கழுகுமலை சாலை அருகே காந்திநகா் கீழ 4ஆம் தெருவிலுள்ள ஆறுமுகம் என்பவரது வீடு சேதமடைந்தது சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் பாா்வையிட்டு நிவாரணம் வழங்கியதுடன், அரசின் உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். அப்போது ஆறுமுகத்தின் மகள் செல்வி நடமாட இயலாத மாற்றுத் திறனாளி என்பதை அறிந்த எம்எல்ஏ, செல்விக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், 3 சக்கர வாகனம் வழங்கப்படும் என உறுதியளித்தாா். நகர மாணவரணி வெங்கடேஷ், நகரச் செயலா் பிரகாஷ், வாா்டு செயலா் ஆறுமுகம், விவசாய அணி சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.
Next Story