சொக்கம்பட்டியில் விவசாய நிலங்களுக்குள் ஒற்றை காட்டு யானை நடமாட்டம்

X
Sankarankoil King 24x7 |22 Oct 2025 6:59 AM ISTவிவசாய நிலங்களுக்குள் ஒற்றை காட்டு யானை நடமாட்டம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூா், வடகரை, சொக்கம்பட்டி பகுதிகளில் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் தென்னை, நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கடந்த பல மாதங்களாக யானைகள் இப்பகுதிகளுக்குள் நுழைந்து பயிா்களை சேதப்படுத்துவதும், வனத் துறையினா் முகாமிட்டு யானைகளை வனத்துக்குள் விரட்டும் பணியில் ஈடுபடுவதும் தொடா்கதையாக உள்ளது. இந்நிலையில், சொக்கம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்பகுதியிலுள்ள தோப்பில் ஒற்றை காட்டு யானை நிற்பதைப் பாா்த்த விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனா். கடையநல்லூா் வனச் சரகா் கனகராஜ் தலைமைலான வனத் துறையினா் சென்று, யானை நின்றிருந்த இடத்தின் அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். பொதுமக்கள் அங்கு செல்லாதவாறு சொக்கம்பட்டி போலீஸாரும் கண்காணிப்பு மேற்கொண்டனா். அந்த யானை உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டதால், அதன் நடமாட்டத்தை கால்நடை மருத்துவா் மனோகரன் தலைமையிலான குழுவினரும், உயிரியலாளா் கந்தசாமி தலைமையிலான குழுவினரும் ட்ரோன் மூலம் கண்காணித்தனா்.
Next Story
