ஆலங்குளம் பேரூராட்சி மன்றத் திமுக தலைவர் சுதாவின் பதவியை பறித்து

X
Sankarankoil King 24x7 |22 Oct 2025 1:34 PM ISTபேரூராட்சி மன்றத் திமுக தலைவர் சுதாவின் பதவியை பறித்து
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி மன்றத்திற்கு திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், சுயேட்சை கவுன்சிலர்கள் என 15 பேர் உள்ளனர். பேரூராட்சி மன்றத் தலைவராக திமுக சேர்ந்த 7 வது வார்டு கவுன்சிலரான சுதா என்பவர் பதவி வகித்து வருகிறார். பேரூராட்சி மன்றத் தலைவர் சுதா என்பவர் முறையாக சொத்து வரி செலுத்தாமல் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியாக அவர் மீது பேரூராட்சி மன்ற அதிமுக உறுப்பினரான சுபாஷ் என்பவர் திமுக தலைவர் சுதா மீது சென்னை ஐக்கோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதிமுக மன்ற உறுப்பினர் சுபாஷ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற அமர்வின் 15.10.2024-ம் தேதிய நீதிப் பேராணையினை செயல்படுத்தக் கோரி தொடர்ந்த வழக்கு. திமுக பேரூராட்சி மன்றத் தலைவர் சுதா சொந்தமான கட்டடங்களுக்கு 2022-23 ம் நிதியாண்டிற்குரிய சொத்து வரியினை உரிய காலத்தில் செலுத்த தவறியதற்கும் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் அவர்களின் ஆணை மற்றும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு எண். WP(MD)No.23970/2024-85 நீதிப்பேராணையின்படியும், தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 32 (1)மற்றும் 35-இன்படி சுதா என்பவர், ஆலங்குளம் பேரூராட்சி மன்ற 7வது வார்டு உறுப்பினர் மற்றும் ஆலங்குளம் திமுக பேரூராட்சி மன்றத் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்து தகுதியிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
