கபடி போட்டியில் அசத்திய மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் பாராட்டு.

மாநில அளவில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஏழுமலை சான்றிதழ் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
போளூர் அடுத்த ஆதமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருவாய் மாவட்ட அளவில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆதமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருவாய் மாவட்ட அளவில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் போளூர், கலசப்பாக்கம், தண்டராம்பட்டு, செங்கம், கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட 14 மண்டலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். மேலும் இவ்விளையாட்டில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் சுரேந்தர், வெற்றிமாறன், ஹரிஷ், எட்டாம் வகுப்பு மாணவர் திருமாவளவன் உள்ளிட்டோர் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். தகுதி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏழுமலை சான்றிதழ்களை வழங்கினார்.  இந்நிகழ்வின் போது உடன் உதவி தலைமை ஆசிரியர் செல்வம், உடற்கல்வி ஆசிரியர் பன்னீர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படவிளக்கம் : போளூர் அடுத்த ஆதமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருவாய் மாவட்ட அளவில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு நடைபெற்ற கபடி போட்டியில் மாநில அளவில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஏழுமலை சான்றிதழ் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
Next Story