இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு.

X
Paramathi Velur King 24x7 |27 Oct 2025 6:53 PM ISTஇருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு போலீசார் விசாரணை.
பரமத்தி வேலூர், அக். 27: நாமக்கல் மாவட்டம் குமாரசாமிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (எ) ராமன் (82), தொழிலாளி. இவர் மோகனூர் வட்டம், வாழவந்தி அருகே உள்ள மேலப்பட்டிக்கு தனது உறவினரை பார்ப்பதற்காக பேருந்தில் சென்றார். பின்னர், அங்கிருந்து மேலப்பட்டிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் வந்த இருசக்கர வாகனம் ராமன் மீது மோதியது. இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த ராமன், வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவனைக்கு வரும் வழியிலேயே ராமசாமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து விபத்தை ஏற்படுத்திய மேலப்பட்டியைச் சேர்ந்த சின்னசாமி (50) மீது பரமத்தி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
