புதுகை: வாகனங்கள் பறிமுதல்-ஓட்டுநர்களுக்கு வலைவீச்சு

குற்றச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி ஸ்ரீசுகந்த பரிமளேஸ்வரர் கோயில் அருகே கறம்பக்குடி போலீசார் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக மணல் அள்ளி வந்த 2 சிறிய ரக சரக்கு வாகனங்கள் மற்றும் ஒரு யூனிட் மணலை பறிமுதல் செய்தனர். சரக்கு வாகனங்களை ஓட்டி வந்த 2 ஓட்டுநர்கள் தப்பிச்சென்ற நிலையில் அவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
Next Story