ஆரணியில் அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சூரசம்ஹாரம் பெருவிழா

பக்தர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அரோகரா அரோகரா என வழிபாடு.
ஆரணி டவுன் ஆரணிபாளையம் பகுதியில் எழுந்தருளியுள்ள பழமை வாய்ந்த அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில். ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா முன்னிட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி விழா ஆறு நாட்கள் சிறப்பான முறையில் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கடந்த புதன்கிழமை அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ சுப்பிரமணியசாமி ஆலயத்தில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஆறு நாட்கள் தினந்தோறும் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. தொடர்ந்து இன்று திருக்கோவில் வளாகத்தில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரம் செய்யட்டும் கஜமுகசுரன், சிங்கமுகசுரன், சூரனுடன், போர் புரியும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முருகப்பெருமான் பத்மா சூரனை வதம் செய்யப்பட்டு பின்னர் வேலுக்கு பால் மற்றும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பித்து வழிபாடு நடைபெற்றன. இந்த நிகழ்வில் சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா அரோகரா என வழிபாடு செய்தனர்.
Next Story