வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்காக ஆலோசனை

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்காக ஆலோசனை
X
தூத்துக்குடி இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தலைமையில் ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தலைமையில் ஆலோசனை கூட்டம் இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது இதை தொடர்ந்து இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான இளம் பகவத் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் தேர்தல் ஆணைய உத்தரவு படி சிறப்பு தீவிர திருத்தம் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது அதற்கான விதிகள் என்ன என்பது குறித்து அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு விளக்கி கூறப்பட்டது இந்த பணிகள் நவம்பர் மாதம் முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் துவங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் தேர்தல் பிரிவு ஊழியர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
Next Story