கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளியில் சிறுதானிய உணவு திருவிழா.

X
Krishnagiri King 24x7 |28 Oct 2025 6:58 PM ISTகிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளியில் சிறுதானிய உணவு திருவிழா.
கிருஷ்ணகிரி ஜாகிர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக உணவு தினத்தை முன்னிட்டு சிறுதானிய உணவுத் திரு விழா நடந்தது. மாணவ, மாணவிகள் சிறு தானியங்களைக் கொண்டு தாங்கள் தயாரித்த உணவுப் பொருட்களை காட்சிக்காக வைத்திருந்தனர். இதில் நவதானிய பொரியல், சிறுதானிய அடை, முருங்கைக்கீரை அதிரசம், கொழுக்கட்டை என மொத்தம் 250-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களை காட்சியில் வைத்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சுதாராணி தலைமை தாங்கினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் அசோக்குமார் உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
Next Story
