நேர்மையாக செயல்பட்ட பெண்ணை பாராட்டிய காவல் ஆணையர்

மதுரையில் சாலையோரம் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணிற்கு காவல் ஆணையர் பாராட்டுக்கள் தெரிவித்தார்.
மதுரை மாநகர் விளக்குத்தூண் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், நேற்று (அக்.27) சாலையோரம் கிடந்த 17.50 இலட்சம் ரூபாயை மீட்டு, உரிய நபரிடம் சேர்க்கும் பொருட்டு காவல்துறையினர் வசம் ஒப்படைத்த திருமதி . செல்வமாலினி என்பவரின் நேர்மையை பாராட்டும் விதமாக, இன்று (28.10.2025) மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து மதுரை மாநகர காவல் சார்பாக பொன்னாடை அணிவித்து பாராட்டுசான்றிதழ் மற்றும் பணவெகுமதி வழங்கி தனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்தார்.
Next Story