காவேரிப்பட்டணம் அருகே லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஒ. கைது.

X
Krishnagiri King 24x7 |29 Oct 2025 7:07 AM ISTகாவேரிப்பட்டணம் அருகே லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஒ. கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்துள்ள போத்தாபுரத்தைச் சோ்ந்தவா் காசி. முன்னாள் ராணுவ வீரரான இவரது அண்ணன் மகன் கணபதி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது மனைவி லட்சுமிக்கு (42) வாரிசு சான்றிதழ் கேட்டு காசி விண்ணப்பித்த நிலையில் மிட்டஅள்ளி வி.ஏ.ஒ. ராமநாதனை (48) காசி சந்தித்து வாரிசு சான்றிதழ் கேட்டுள்ளார் வி.ஏ.ஒ. ராமநாதன் வாரிசு சான்றிதழ் தர 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் மீண்டும் வி.ஏ.ஒ. சந்தித்தபோது அவர் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தந்தால் வாரிசு சான்றிதழ் தருவதாக கூறியுள்ளார்இதுகுறித்து காசி கிருஷ்ணகிரியில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் 3 ஆயிரத்தை வி.ஏ.ஒ. ராமநாதனிடம் காசி கொடுத்தபோது, போலீசார் ராமநாதனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.
Next Story
