கோவில்பட்டியில் திமுக அலுவலகம் தலைவர் சிலை முதல்வர் திறந்து வைத்தார்.

X
Thoothukudi King 24x7 |29 Oct 2025 9:10 AM ISTகோவில்பட்டியில் நகர திமுக அலுவலகம் மற்றும் கலைஞர் திருவுருவச் சிலையை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கோவில்பட்டியில் திமுக புதிய அலுவலகம் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி திருவுருவ சிலையை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முன்னதாக மாவட்ட எல்கையில் தமிழக முதல்வர் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக அமைச்சர் கீதா ஜீவன் பொறுப்பேற்ற பிறகு கட்சியின் வளர்ச்சி பணிகளில் சூறாவளியாக சுழன்று பணியாற்றி வருகிறார். தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி, ஆகிய சட்டமன்றத் தொகுதியில் திமுக மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தீவிரமாக மக்கள் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கோவில்பட்டியில் திமுக சொந்த அலுவலகம் மற்றும் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி திருவுருவச் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் கீதா ஜீவன் முயற்சியால் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் கலைஞர் அறிவகம் என்ற பெயரில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக நகர கழக அலுவலகம் திறப்பு விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் தமிழக முதல்வரும் திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.அலுவலக முகப்பில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வரான கலைஞர் கருணாநிதி வெண்கல சிலையையும் திறந்து வைத்தார். அங்கு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த கலைஞர் உருவப்படத்திற்கு முதல்வர் மு க ஸ்டாலின் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக சார்பில் கனிமொழி கருணாநிதி எம்பி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் வெள்ளி செங்கோல் வழங்கினர். இதனை தொடர்ந்து திமுக அலுவலகத்தின் முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தையும் பார்வையிட்டார், நிகழ்ச்சியில் தமிழகஅமைச்சர்கள் கே என் நேரு, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரிய கருப்பன், ராஜ கண்ணப்பன், மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, ராஜா கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி திமுக மாவட்டச் செயலாளராக இருந்த மறைந்த என் பெரியசாமி தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் திமுகவிற்கு சொந்த அலுவலகம் ஆக கலைஞர் அரங்கம் அமைத்து அதை அப்போதைய தலைவர் கருணாநிதி திறந்து வைத்தார் தற்போது திமுக வடக்கு மாவட்ட செயலாளர் ஆக உள்ள அமைச்சர் கீதா ஜீவன் கோவில்பட்டியில் கலைஞர் அரங்கம் அமைத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் திறந்து வைத்ார் என திமுகவினர் பெருமை உடன் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
Next Story
