ராமநாதபுரம் பாத யாத்திரைக்கு ஆதரவு கொடுக்க வேண்டுகோள்

சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் 150வது ஜெயந்தியை முன்னிட்டு யூனிட்டி மார்ச் (பாதயாத்திரா) நடைபெற உள்ளது பொதுமக்கள் ஆதரவு கொடுக்க நேரு யுவகேந்திரா வேண்டுகோள்
ராமநாதபுரம் மாவட்டம் மேரா யுவா பாரத் (MY Bharat) ராமநாதபுரம் மாவட்டத்தின் சார்பில், சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் 150வது ஜெயந்தியை முன்னிட்டு “யூனிட்டி மார்ச் (பதயாத்திரா)” நிகழ்வை மேற்கொள்வதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு மேரா யுவா பாரத் அலுவலகம், பாரதி நகர், ராமநாதபுரதில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மென்டா தலைமையில் மேரா யுவா பாரத் அமைப்பின் இளைஞர் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு துறை நிபுணர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் ஜே. ஜேம்ஸ் ஜெயப்பால் முதல்வர், அரசு சட்டக்கல்லூரி, ராமநாதபுரம், சௌந்தரபாண்டியன் மத்திய அரசு நிலைநிலைத்த வழக்குரைஞர், ராமநாதபுரம், டாக்டர் கே. சுல்தான் சையத் இப்ராஹிம் கூடுதல் துணை முதல்வர் மற்றும் வேதியியல் இணை பேராசிரியர், டாக்டர்ஜாகீர் ஹுஸைன் கல்லூரி, இளையான்குடி, பி. தீனதயாலன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், சுற்றுச்சூழல் கல்வி திட்டம் மற்றும் தேசிய பச்சை படை (NGC), ராமநாதபுரம், ஆனந்த், மாவட்ட இளைஞர் அணி தலைவர், ராமநாதபுரம், எஸ். சாமிநாதன் தலைமை நிர்வாகி, சேது வித்யாலயா பள்ளி, ராமநாதபுரம், NSS திட்ட அலுவலர் மற்றும் YRC மாவட்ட ஒருங்கிணைப்பாளர், செய்யது அம்மாள் கலை & அறிவியல் கல்லூரி, ராமநாதபுரம் இவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சமூக ஒற்றுமை, இளைஞர் பங்களிப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
Next Story