மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த மூதாட்டி பலி.

X
மதுரை மாவட்டம், சோழவந்தான் நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராக்கம்மாள் (81) என்ற மூதாட்டி திருமணம் செய்யாமல் உறவினரான மகேஸ்வரியின் பராமரிப்பில் வசித்து வந்தார். இவர் கண் பார்வை இல்லாத மாற்றுத்திறனாளி. இவர் கடந்த 23ம் தேதி மாலை வீட்டின் அருகே படுத்திருந்த போது ராக்கம்மாள் மீது மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர். தீ காயங்களுடன் துடித்தவரை அருகிலிருந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் ராக்கம்மாள் நேற்று (அக்.28) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சோழவந்தான் போலீசார் தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story

