மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு சிறை தண்டனை

X
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன்( 48) என்பவர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த போது அங்குள்ள அறையை ஒரு மாணவி தனியாக சுத்தம் செய்தபோது அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ராமகிருஷ்ணன் மீது டி.கல்லுப்பட்டி போலீசார் போக்சோ வழக்கு பதிந்து மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில் நீதிபதி முத்துக்குமாரவேல் அளித்த தீர்ப்பில் ராமகிருஷ்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
Next Story

