சேலத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சேலம் மாவட்டம் சார்பில் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க மாவட்ட தலைவர் ராமாயி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வம் விளக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத சம்பள நிலுவைத்தொகை வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியை வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். முடிவில் சங்க மாவட்ட பொருளாளர் குமார் நன்றி கூறினார்.
Next Story