சேலத்தில் தாயுடன் தகராறு நர்சிங் மாணவி தற்கொலை

சேலத்தில் தாயுடன் தகராறு நர்சிங் மாணவி தற்கொலை
X
போலீசார் விசாரணை
சேலம் கொண்டலாம்பட்டி பக்கம் உள்ள நெய்க்காரப்பட்டி மேல் தெருவை சேர்ந்தவர் சங்கர் இவரது மகள் இந்துமதி. அரியானூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி நர்சிங் படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது இந்துமதிக்கும், தாய்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இதில் வேதனை அடைந்த இந்துமதி திடீரென வீட்டில் தூக்கிட்டு கொண்டார். உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த இந்துமதியை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story