தந்தை இரண்டாவது திருமணம் செய்ததால் வாலிபர் தற்கொலை

தந்தை இரண்டாவது திருமணம் செய்ததால் வாலிபர் தற்கொலை
X
போலீசார் விசாரணை
சேலம் கன்னங்குறிச்சி ஐயந்திருமாளிகை முதல் தெருவை சேர்ந்தவர் முத்துமணி. இவரது மகன் மணிகண்டன். இவரின் தாய் சுசீலா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனின் தந்தை முத்துமணி, பாட்டி மாதம்மாள் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் இருவருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. தண்டனை முடிந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இருவரும் சிறையிலிருந்து வெளியே வந்தனர். வெளியே வந்த முத்து மணி இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார். மணிகண்டன் உறவினர்கள் பராமரிப்பில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு வலிப்பு நோய் இதற்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதில் அதிருப்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை மணிகண்டன் வீட்டில் தூக்கிட்டு கொண்டார். அவரது பாட்டி மாதம்மாள் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தனர் உள்ளே மணிகண்டன் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story