சேலத்தில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

X
சேலம் கிச்சிப்பாளையம் ராஜாபிள்ளை காடு பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 28). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் முன்விரோதம் காரணமாக தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபு என்பவரை தாக்கினார். இதில் பிரபு காயமடைந்தார். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்செல்வனை கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர் மீது சேலம் நகர குற்றப்பிரிவு, அழகாபுரம் மற்றும் கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் தமிழ்செல்வனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனருக்கு, துணை போலீஸ் கமிஷனர் கேழ்கர் சுப்ரமணிய பாலசந்தரா பரிந்துரை செய்தார். இதை பரிசீலித்து தமிழ்செல்வனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி நேற்று உத்தரவிட்டார்.
Next Story

