நாமக்கல்லில் புதிய சித்த மருத்துவமனையை திறந்து வைத்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
NAMAKKAL KING 24X7 B |2 Nov 2025 6:23 PM ISTசித்த மருத்துவக் கல்லூரியாக 2 ஆண்டுகளில் தரம் உயர்த்தப்படும் - புதிய சித்த மருத்துவமனையை திறந்து வைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் மாநகராட்சி, பழைய அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் , நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் , மேயர் து.கலாநிதி அவர்கள், இந்திய மருத்துவம் (ம) ஹோமியோபதி துறை ஆணையாளர் மு.விஜயலட்சுமி, ஆகியோர் முன்னிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் ரூ.3.34 கோடி மதிப்பீட்டில் 50 ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை உட்பட 3 புதிய பொது சுகாதார அலகுகள் மற்றும் 2 புதிய துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது, நாமக்கல் மாவட்டத்தின் மருத்துவ வளர்ச்சியில் ஒரு புதிய மைல் கல் என்ற வகையில், பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ரூ.1.00 கோடி மதிப்பில் 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் சித்த மருத்துவம், யோகா மற்றம் இயற்கை மருத்துவம் மூலமாக பொது மக்களுக்கு சிகிச்சை வழங்கப்பட உள்ளது. இம்மருத்துவமனையில் சித்த மருத்துவத்தின் சிறப்பு சிகிச்சை முறைகளான தொக்கணம், ஒற்றடம், நீராவி குளியல், புற வளையம், சிறதாரை, வர்மம், அட்டை விடல், சுட்டிகை, வேது பிடித்தல், நசியம் போன்ற சிகிச்சைகள் மருத்துவ பயனாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இவ்வளாகத்தில் ஏற்கனவே செல்பட்டுக் கொண்டிருக்கும் 16 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ பிரிவும் சேர்த்து 66 படுக்கைகள் கொண்ட உள் நோயாளிகள் மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட உள்ளது. புதிய பணியிடங்களும் உருவாக்கப்பட்டு, நாமக்கல் மாவட்ட மக்களுக்கு பயன்தரும் பெரிய அளவில் வகையில் இம்மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் 19 இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரூ.1,018 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என்று அறிவித்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் 2 அரசு தலைமை மருத்துவமனைகள் வேண்டும் என்ற கோரிக்கையினை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் வைத்தார். அதனடிப்படையில் ரூ.53.39 கோடி மதிப்பில் இராசிபுரம் அரசு மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு தன்னிறைவு பெற்ற மருத்துவமனையாக பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், ரூ.23 கோடி மதிப்பில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு கட்டிடப்பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது. விரைவில் பணியாளர்கள் நியமனம் முடிவுற்றவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படவுள்ளது. இவ்வாறு நாமக்கல் மாவட்டத்தில் 2 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அவர்கள் நாமக்கல் மாவட்ட மக்கள் சித்த மருத்துவத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். கொல்லிமலை சித்தர்களால் ஆளப்பட்ட மிகப்பெரிய மையம். உலக அளவிலான சித்த மருத்துவத்திற்கான புகழிடம் என்றால் அது கொல்லிமலை ஆகும். கொல்லிமலையை ஆராய்ச்சி மையமாக கொண்டு, பழைய அரசு மருத்துவமனையில் 9 ஏக்கர் பரப்பளவில் சித்த மருத்துவமனையை தொடங்கி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் 16 படுக்கை வசதி கொண்ட சித்த மருத்துவ சிகிச்சை பிரிவிற்கு, மேலும் புதியதாக 50 படுக்கை வசதியை செய்து கொடுத்துள்ளார்கள். அரசு விதிமுறைகளின்படி, 60 படுக்கைகளுடனான சித்த மருத்துவனை எங்கே செயல்படுகிறதோ, அங்கே சித்த மருத்துவக் கல்லூரி அமைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, ஆகவே ஒதுக்கீடு செய்யபட்ட 66-படுக்கைகள் கொண்ட இம்மருத்துவமனையானது 2 ஆண்டுகளில் அரசு விதிமுறைகளின்படி, அரசு சித்த மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. கடந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தது போல இன்றைய தினம், ரூ.6 இலட்சம் செலவில், நாமக்கல் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட வீடற்ற நபர்களை பராமரிப்பதற்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் (Emergency Care and Recovery Centres -ECRC) – தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வீடற்ற மனநலம் பாதிக்கப்பட்ட பயனாளர்களுக்கான தமிழக அரசு மேற்கொண்டு வரும் தற்போதைய முயற்சிகளுக்கு சுகாதார மற்றும் குடும்பநலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, காவல்துறை, குழந்தைகள் நலத்துறை, தமிழ்நாடு மகளிர் வளர்ச்சிக்கழகம், சமூக நலத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் போன்ற முக்கிய துறைகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படவுள்ளது. இத்துறைகளின் மூலம் பயனாளர்களின் மீட்பு, தங்குமிடம், சிகிச்சை மற்றும் மறுவாழ்வு ஆகிய முக்கிய சேவைகள் வழங்கப்படவுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இம்மையம் 10 படுக்கைகளுடன் செயல்பட உள்ளது. இம்மையம் அரசின் உதவியுடன் அரசு சாரா அமைப்பான (NGO) Dream India Network மூலமாக செயல்படவுள்ளது. புற நோயாளிகளை அடையாளம் கண்டு, தொடக்க நிலை சிகிச்சை வழங்கி, பிறகு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி சிகிக்சை வழங்குவதற்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட வட்டார மருத்துவமனை வளாகத்தில் புற நோயாளிகள் வார்டு உருவாக்கி தருவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இன்றைய தினம் வினைதீர்த்தபுரம், கபிலர்மலை மற்றும் இறையமங்கலத்தில் தலா ரூ.50 இலட்சம் வீதம் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 3 பொது சுகாதார அலகுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடத்தில் இயங்கும் ஆய்வகத்தின் மூலம் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெருவர். மேலும், கூடச்சேரியில் ரூ.33.00 இலட்சம் மதிப்பிலும், அணிமூர் பகுதியில் ரூ.45.00 இலட்சம் மதிப்பிலும் என ரூ.78.00 இலட்சம் மதிப்பில் 2 துணை சுகாதார நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிராம சுகாதார செவிலியர் இக்கட்டிடத்தில் தங்கி பொதுமக்களுக்கு தடுப்பூசி பணிகள், தாய்சேய் நல சேவைகள், முதல் உதவி சிகிச்சை, தொற்று நோய் மற்றும் தொற்றா நோய் சேவைகள் மற்றும் இதர முதல்நிலை மருத்துவ சேவைகளை பொதுமக்களுக்கு வழங்குவர். நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ரூ.364.74 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், சேந்தமங்கலம், குமாரபாளையம், பரமத்திவேலூர், இராசிபுரம், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் ரூ.129.75 கோடி செலவில் 34 மருத்துவ கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது என மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சித்த மருத்துவமனை மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் பிற பணிகளில் பணியாற்ற உள்ள மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பணி ஆணைகளையும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், நாமக்கல் மாநகராட்சி துணை மேயர் செ.பூபதி, பொது சுகாதாரம் (ம) நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.சோமசுந்தரம் (சென்னை), நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கே.சாந்தா அருள்மொழி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் (சேலம் (ம) நாமக்கல்) மரு.கோ.புகழேந்தி, இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) மரு.அ.ராஜ்மோகன், மாவட்ட நல அலுவலர் மரு.க.பூங்கொடி, நாமக்கல் மாநகராட்சி ஆணையாளர் க.சிவக்குமார், உதவி சித்த மருத்துவ அலுவலர் மரு.து.தமிழ்செல்வன், உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story



