அரசு பேருந்து மோதியதில் பெண் படுகாயம் அரசு பேருந்து மீது லாரி மோத, லாரி, பேருந்து சேதம்

அரசு பேருந்து மோதியதில் பெண் படுகாயம் அரசு பேருந்து மீது லாரி  மோத, லாரி, பேருந்து சேதம்
X
குமாரபாளையம் அருகே பெண் மீது அரசு பேருந்து மோதியதில் பெண் படுகாயமடைந்ததுடன், அரசு பேருந்து மீது பின்னால் வந்தா லாரி மோத, லாரியும், பேருந்தும் சேதமானது.
குமாரபாளையம் அருகே கலியனூர் பகுதியில் வசிப்பவர் மணிமேகலை, 57. விவசாயம். இவர் நேற்றுமுன்தினம் மாலை 12:50 மணியளவில், சேலம் கோவை புறவழிச்சாலை, எதிர்மேடு பகுதியில் சாலையை நடந்து கடந்த போது, அவ்வழியாக வந்த அரசு பேருந்து மோதியதில் படுகாயமடைந்தார். மூதாட்டி மீது மோதியதால் , அரசு பேருந்தை அதன் ஓட்டுனர் நிறுத்த, அதன் பின்னால் வந்த லாரி ஓட்டுனர், பேருந்தின் பின் பகுதியில் மோத, பேருந்தின் பின் பகுதி, லாரியின் முன்பகுதி சேதமானது. மணிமேகலை கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பேருந்து ஒட்டுனர் நீலகிரி மாவட்டம், முதுகுளம் பகுதியை சேர்ந்த சிவகுமார், 47, என்பவரை கைது செய்தனர்.
Next Story