சேதமான சாலையை சீர்படுத்த கோரிக்கை

சேதமான சாலையை சீர்படுத்த கோரிக்கை
X
குமாரபாளையம் அருகே சடையம்பாளையத்திலிருந்து குண்டாங்கல் காடு மேட்டு வளவு செல்லும் சாலையை சீர்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
குமாரபாளையம் அருகே சடையம்பாளையம் வாய்க்கால் கரையில் எடப்பாடி சாலை செல்லும் குண்டாங்கல் காடு மேட்டு வளவு செல்லும் தார் சாலை மிகவும் பழுதாகி பல்லாங்குழி போல் உள்ளது. சாலையின் இருபுறமும் முள் செடிகள் அதிகம் வளர்ந்து சாலையை மறைப்பதினால் வாகனத்தில் செல்பவர்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. இந்த சாலையில் அதிகளவில் மாணவ,மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்கின்ற பொதுமக்களும் பயணிக்கின்றனர். சாலை பழுதடைந்து இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது..ஆகையால் பொதுமக்களின் நலன் கருதி பழுதடைந்த சாலையை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் மக்கள் நீதி மய்யம் மகளிரணி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story