இன்ஸ்டாகிராமில் தவறாக பதிவு செய்த நபர் கைது

இன்ஸ்டாகிராமில் தவறாக பதிவு செய்த நபர் கைது
X
தனியார் கல்லூரி உணவு விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்கள்உயிரிழந்ததாக தவறான பதிவுகளை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த திருச்சியைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் செயல்படும் தனியார் (எக்சல்)கல்வி நிறுவனத்தில் கடந்த 27ஆம் தேதி உணவு சாப்பிட்ட 128 மாணவ மாணவிகள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி எடுத்தனர் இவர்களை எக்ஸெல் கல்வி வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் மற்றும் குமாரபாளையம் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினர் இந்நிலையில் சம்பவத்தில் சில உயிரிழந்ததாக இன்ஸ்டாகிராம் மற்றும் இணையதளங்கள் வழியாக அமைதியை சீர்ழிக்கும. வகையிலும் இணையதளங்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் பகுதிகளில் தவறாக பதிவு செய்த நான்கு இணையதளங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது இந்நிலையில் karthikumarrk@ ._ Personal என்ற இன்ஸ்டாகிராம் மூலம் இந்த எக்ஸெல் கல்வி நிறுவனத்தில் சில குழந்தைகள் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக இணையதளத்தில் தவறாக பதிவு செய்தது கருத்து குமாரபாளையம் காவல் ஆய்வாளர் பொறுப்பு சங்கீதா அவர்களிடம் மனு வழங்கப்பட்டது இதனை எடுத்து தனிப்படை போலீசார் தொலைபேசி செடிவந்த நிலையில் காவிரி நகர் பாலம் பகுதியில் மறைந்திருந்து திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்கிற இளைஞரை போலீசார் கைது செய்தனர் இணையதளங்களில் தவறாக பதிவு செய்யப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்
Next Story