அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கோரிக்கை மனுவை அளித்த எம்.பி வி.எஸ் மாதேஸ்வரன்.

X
NAMAKKAL KING 24X7 B |2 Nov 2025 10:08 PM ISTமருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பழைய நாமக்கல் மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் புதிதாக 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை திறப்பு விழாவில்
நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் VS.மாதேஸ்வரன் MP அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். கோரிக்கைகள் மோகனூர் ஒன்றியம் ஆலம்பட்டி சுகாதார நிலையத்தை பயன்படுத்துவதற்கும் நாமக்கல்லில் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்க கோரியும் நாமக்கல் மோகனூர் சாலையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் கூடிய தாலுகா மருத்துவமனையாக மீண்டும் செயல்பட கோரிக்கை நாமக்கல் மோகனூர் ஒன்றியம் பரலி அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை பரளி அரசு சுகாதார வளாகமாக 24 மணி நேரமும் செயல்பட கோரிக்கை. நாமக்கல் சேலம் தேசிய நெடுஞ்சாலை உள்ள பொதுச் சத்திரம் அரசு சுகாதார நிலையத்தை அனைத்து வசதிகளுடன் மேம்படுத்த கோரிக்கை மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தர ஆவண செய்யுமாறு நாமக்கல் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் VS.மாதேஸ்வரன் எம்பி வேண்டுகோள் விடுத்தார்.
Next Story
