தி.மு.க. சார்பில் வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்.

தி.மு.க. சார்பில் வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்.
X
பொத்தனூரில் தி.மு.க. சார்பில் வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி பங்கேற்பு
பரமத்திவேலூர், நவ.7: பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் ,பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், வெங்கரை பேரூர் தி.மு.க. சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடி பி.எல்.ஏ.-2, பி.டி. ஏ. முகவர்கள் ஆலோசனை பயிற்சி கூட்டம் பொத்தனூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பொத்தனூர் பேரூராட்சி தலைவரும் பேரூர் செயலாளருமான கருணாநிதி, பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவரும், மாவட்ட பொதுக்குழு உறுப்பினருமான டாக்டர். சோமசேகர், பாண்டமங்கலம் பேரூராட்சி துணை தலைவரும், பேரூர் செயலாளருமான பெருமாள் என்கிற முருகவேல், பரமத்தி வேலூர் பேரூர் செயலாளர் முருகன், வெங்கரை பேரூர் செயலாளர் ராமலிங்கம் ஆகியோர்கள் தலைமை வகித்தனர். நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ் பிரபாகரன்,கபிலர்மலை தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் சாமிநாதன்,மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பூக்கடை சுந்தர்,மாவட்ட துணைச் செயலாளர் அன்பழகன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி மற்றும் பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் உமாராணி கலந்து ஆகியோர் கொண்டு எடுக்கப்பட்ட பட்டியலை சரி பார்க்க வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்தம், தேர்தலில் வாக்கு சாவடி முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும். 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கு உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற உழைக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினர். இந்த வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் வைரமணி. பரமத்தி வேலூர் பேரூர் கழக அவைத்தலைவர் மதியழகன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள், இளைஞர் அணி பொறுப்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story