பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த விவசாயி குண்டர் சட்டத்தில் கைது.

X
Paramathi Velur King 24x7 |8 Nov 2025 8:24 PM ISTகபிலர்மலை அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த விவசாயி குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
பரமத்திவேலூர்,நவ.8: பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (60). இவரது மனைவி சரஸ்வதி (55). அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமியின் உறவினர். துரைசாமி (43). விவசாயி. துரைசாமிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 9-ந் தேதி அவர் மது அருந்திவிட்டு பழனிச்சாமி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது துரைசாமி, பழனிச்சாமியின் மனைவி சரஸ்வதியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த துரைசாமி வீட்டில் இருந்த இரும்பு குழாயை எடுத்து வந்து சரஸ்வதியின் தலை மற்றும் பல்வேறு இடங்களில் பலமாக தாக்கினார். இதில் சரஸ்வதியின் மண்டை உடைந்து படுகாயம் அடைந்தார். பின்னர் துரைசாமி சரஸ்வதியை பார்த்து உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து ஓடி விட்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சரஸ்வதியை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்க ப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இது குறித்து சரஸ்வதி ஜேடர்பாளையம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் குழாயால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த துரைசாமியை கைது செய்து நாமக்கல்லில் உள்ள கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விமலா பரிந்துரையின் பேரில் கலெக்டர் துர்கா மூர்த்தி உத்தரவின் துரைசாமியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story
