பரமத்தி வேலூர் அருகே கூலி தொழிலாளி மாயம்.

பரமத்தி வேலூர் அருகே கூலி தொழிலாளி மாயம்.
X
பரமத்தி வேலூர் அருகே கூலி தொழிலாளி மாயம் போலீசார் விசாரணை.
பரமத்தி வேலூர்,நவ.12: பரமத்தி வேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் உள்ள செங்கப்பள்ளி மட்டப்பாறை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி அன்னகாமாட்சி(80). இவரது மகன் செல்வகுமார் (42). இவர் பொள்ளாச்சி பகுதிக்கு தேங்காய் வெட்டும் தொழிலுக்காக குமாரபாளையத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவருடன் செல்வதாக வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் தனது மகன் செல்வகுமாரிடமிருந்து அன்னகாமாட்சிக்கு போன் எதுவும் வராததால் அதிர்ச்சி அடைந்த அன்னகாமாட்சி தனது மகன் செல்வகுமார் உடன் சென்ற மாரியப்பனின் மூத்தமகன் சந்திரன் என்பவருக்கு போன் செய்து கேட்டபோது தனது தந்தை உடல்நிலை சரியில்லாததால் வீட்டுக்கு வந்து விட்டதாகவும், செல்வகுமார் ஈரோடு செல்வதாக கூறிவிட்டு சென்று விட்டதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் அன்னகாமாட்சி தனது மகன் செல்வக்குமாருக்கு போன் செய்த போது போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதன் காரணமாக அன்னகாமாட்சி உறவினர்கள் தனது வீடுகளிலும், பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தனது மகன் செல்வக்குமாரை தேடி பார்த்தார்.ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அவர் பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன செல்வக்குமார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story