மன்னருக்கு பட்டம் சூட்ட முகூர்த்தக்கால் நடப்பட்டது.

X
Paramathi Velur King 24x7 |17 Nov 2025 6:36 PM ISTமன்னருக்கு பட்டம் சூட்டம் விழாவிற்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது.
பரமத்திவேலூர், நவ.17: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா இருக்கூரில் இடும்பை அல்லாள இளைய நாயக்கர் வம்சாவளி மன்ன ருக்கு பட்டம் சூட்டும் விழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வருகிற 22-ந் தேதி விநாயகர் வழிபாடு, வாஸ்து பூஜை, பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. 23-ந் தேதி காலை 7.15 மணிக்கு திருக்கட்டாரிக்கு அபிஷேகமும், 8.15 மணிக்கு கலச அபிஷேகமும்,8.30 மணிக்குமேல் 9.30 மணிக்குள் மூல மந்திர உபதேசம்செய்தல்,திருக்கட்டாரி மற்றும் செங்கோல்வழங்கி கவுரவித்தல் மற்றும் பட்டம் சூட்டும் நிகழ்ச்சி நடைபெறு கிறது. இதற்கான ஏற்பாடுகளை தொல்குடி வேட்டுவக்கவுண் டர்கள், சமூக பெருமக்கள் மற்றும் அல்லாள இளையான் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.
Next Story
