நவோதயா பள்ளியில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்ட பாரதியார் பிறந்த நாள் விழா.

X
NAMAKKAL KING 24X7 B |14 Dec 2025 7:15 PM ISTநவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் பாரதியாரின் 143ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளியில் உள்ள பாரதியாரின் உருவப் படத்திற்கு பள்ளி நிர்வாகத்தினர், முதல்வர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.இந்திய சுதந்திர போராட்டத்திற்காக தன் கவிதைகளுக்கு உயிர் கொடுத்து ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவேண்டும், இந்திய நாடு சுதந்திரம் அடையவேண்டும் என்று போராடிய தியாகிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், மக்கள் என தன்னுடைய இன்னுயிர் நீத்தவர்கள் பலர். அவர்களில் இந்தியா சுதந்திரத்திற்காக பல்வேறு கவிதைகளை எழுதி தமிழ் மக்களின் மனதில் வீரத்தை விதைத்த புரட்சி கவிஞர் மகாகவி பாரதியாரின் 143ஆவது பிறந்தநாள் பள்ளியில் கொண்டாடப்பட்டது. குழந்தைகள் பாரதியாரைப் போல் வேடமணிந்து வந்திருந்தனர், பாரதியாரின் கவிதைகளை இசையோடு பாடியும், அவரின் வாழ்க்கை வரலாற்றை உரைவீச்சாகவும் பேசினார்கள். பள்ளி மாணவ, மாணவியருக்கு இது நாட்டுப்பற்றையும், தன்னம்பிக்கையும் ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. நிகழ்ச்சியின் நிறைவாக பள்ளியின் செயலாளர் தனபால் பாரதியாரின் திருஉருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார் பின்னர் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி குழந்தைகளை வாழ்ததினார். அவர் பேசுகையில் “குழந்தைச் செல்வங்கள் பாரதியா, பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் போன்றோரின் வாழ்க்கை வரலாற்றை படித்து அவர்களைபோல தமிழ்மொழிப் பற்றுடனும், நாட்டுப்பற்றுடன் ஒவ்வொருவரும் வாழவேண்டும் என்று வாழ்த்தி பாராட்டினார். பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
Next Story
