நாகையில் திறனாய்வு போட்டி

நாகையில் திறனாய்வு போட்டி
X
School News
நாகப்பட்டினம் | 12.01.2026 நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ லலிதாம்பிகை வித்யா மந்திர் பள்ளியில் மாணவிகளின் மறைந்திருக்கும் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ‘Shining Star Talent Show’ என்ற தலைப்பில் திறனாய்வு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிக்கு Lions Club தலைவர் டாக்டர் கே. செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மாணவிகளின் படைப்பாற்றலை பாராட்டி பேசினார். நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் ஆர்த்தி சந்தோஷ் தலைமையில் நடைபெற்றது. போட்டிகளில் கிளே மாடலிங், ஆர்ட் & கிராஃப்ட், வெஜிடபிள் கார்விங், ஃபயர்லெஸ் குக்கிங், ஹெல்தி ஃபுட் கம்பிடிஷன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இடம்பெற்றன. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நாகை மாவட்ட செய்தியாளர் ஜீ.சக்கரவர்த்தி
Next Story